தமிழில் பிளாக் தொடங்கலாம் வாருங்கள் – பாகம் 1
என்னதான் ஆயிரம் வெப்தளங்கள் இருந்தாலும் தாய்மொழியில் வெப்தளத்தை அல்லது பிளாக்கை படிப்பதே ஒரு தனி இன்பம் மற்றும் பிரியமாக இருக்கும். ஆங்கிலத்தை ஒப்பிடும்போது தமிழில் மிகவும் குறைவாகவே வெப்தளங்கள் உள்ளன, மற்றும் தமிழில் தொடங்குவதர்க்கான வழிமுறைகளும் உதவிகளும் குறைவு.
இங்கு தமிழில் பிளாக் தொடங்க எளிதான வழிமுறைகளை பற்றி விவாதிக்க உள்ளேன், கண்டிப்பாக இது நிறைய நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.
முதலில் தமிழ் மூலம் இலவசமாக பிளாக் தொடங்க உதவும் தளங்களை பற்றி பார்க்கலாம்.
www.wordpress.com
எனக்கு தெரிந்து இந்த தளம்தான் தமிழுக்கென்றே தனியாக ஒரு பகுதியை வைத்துள்ளது, நேரடியாக தமிழ் பக்கத்திற்கு செல்லta.wordpress.com என்ற இணையதள முகவரியை பயன்படுத்தவேண்டும். இது பின்வரும் மெசேஜ் உடன் உங்களை வரவேற்கும்
ஒரு வலைப்பூ தொடங்கி உங்களை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்
இங்கு உங்களுடைய பிளாக்கை தொடங்குவதற்கு “இப்பவே சேருக ” என்ற பட்டனை கிளிக் செய்யதால் ஒரு படிவம் திறக்கும் அந்த படிவத்தை பூர்த்திசெய்வதன் மூலம் உங்களுக்கான பிளாக்கை (வலைப்பதிவைத்) தொடங்கமுடியும். மறக்காமல்அந்த படிவத்தின் கடைசில் “ஒரு பதிவு கொடுங்க” என்பதை தேர்வு செய்யவும்.இந்த படிவத்தை பூர்த்தி செய்வதை பற்றி அடுத்த பகுதியில் தெளிவாக விளக்கவுள்ளேன்.









