கணினிக்கு புதியவர்களுக்கு கூட கோப்பு காப்பு பற்றிய முக்கியத்துவம் தெரியும், ஆனால் நம்மில் பலருக்கு சரியாக எப்படி கோப்புகளை காப்பது மற்றும் தரவுகளை மீட்பது பற்றிய விவரம் தெரியாத காரணத்தினால் அது கடினமான காரியமாக ஒதுக்கப்பட்டிருக்கும்.  அது தவறான கருத்து என்பதை குறிக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்ட சுழபமான வழிமுறைகள் இதோ.

விண்டோஸ் காப்பு மற்றும் தரவு மீட்பு

காப்பு மற்றும் தரவு மீட்பை ஒத்துழைக்கும் நோக்கத்துடன் தரப்பட்டுள்ள  வசதி தான் விண்டோஸ் Backup and Restore feature.இந்த வசதியை விண்டோஸ் 7 இல் பயன்படுத்த,தேடல் பெட்டியில், Backupஎன்று டைப் செய்து.பின் முடிவு பட்டியலில் உள்ளதை கிளிக் செய்து திறக்கவும்.இந்த வசதியை Windows Vista வில் உபயோகப்படுத்த,Start பட்டனை கிளிக் செய்து, Backup and Restore center என்பதை தேர்ந்தெடுக்கவும் அல்லது மேலே குறிப்பிட்டுள்ளதை போல் தேடல் பெட்டியில் Backupஎன்று டைப் செய்து. பின் முடிவு பட்டியலில் உள்ளதை கிளிக் செய்து திறக்கவும் .

கோப்புகளை back up எடுக்க:
நீங்கள் உங்கள் கோப்புகள் இழக்காமல் இருப்பதற்கு, இரண்டு வழிமுறைகளில்(தானாக காப்பு வரை அமைக்க அல்லது கைமுறையாக) ஏதேனும் ஒன்றின் மூலம் வழக்கமாக அவற்றை back up எடுத்துக் கொள்ளலாம்.

Backup and Restore யை திறக்க Start பட்டனை கிளிக் செய்து, Control Panel க்கு சென்று கணினி மற்றும் பராமரிப்பு கிளிக் செய்து, பின்னர் காப்பு மற்றும் மீட்டமை என்பதை கிளிக் செய்யவும்.

நீங்கள் முன்பு விண்டோஸ் Backup and Restore உபயோகபடுத்தவில்லை என்றால், காப்பு அமைக்கவும் என்பதை கிளிக் செய்யவும், பின்னர் வழிகாட்டியூல் உள்ள வழிமுறைகளை பின்பற்றவும். நீங்கள முன்பு காப்பு உருவாக்கி விட்டீர்கள் என்றால், உங்கள் முறையாக திட்டமிடப்பட்ட காப்பு ஏற்படும் வரை நீங்கள் காத்திருக்கலாம் , அல்லது நீங்களே கைமுறையாக செய்யவேண்டும் என்றால் Backup now என்பதை  கிளிக் செய்வதன் மூலம் ஒரு புதிய காப்பு உருவாக்க முடியும்.

Backup எடுக்கும் போது விண்டோஸ் நிறுவப்பட்ட அதே ஹார்ட்டிஸ்க் ல் உங்கள் கோப்புகளை back up எடுக்க வேண்டாம்.அதற்கு பதிலாக External ஹார்ட்டிஸ்க், டிவிடிக்கள், அல்லது CD பயன்படுத்திக்கொள்ளலாம்.

Backup லிருந்து கோப்புகளை restore  செய்ய:

நீங்கள் இழந்த, சேதமடைந்த, அல்லது தற்செயலாக மாற்றப்பட்ட அந்த கோப்புகளை மீட்டெடுக்க வேண்டும் என்றால் Start பட்டனை கிளிக் செய்து, Control Panel க்கு சென்று கணினி மற்றும் பராமரிப்பு கிளிக் செய்து, பின்னர் காப்பு மற்றும் மீட்டமை என்பதை கிளிக் செய்யவும்.

உங்கள் கோப்புகளை மட்டும் மீட்க, என் கோப்புகளை மீட்டமை என்பதை கிளிக் செய்யவும்.அனைத்து பயனர் கோப்புகளை மீட்க, அனைத்து பயனர் ‘கோப்புகளை மீட்டமை என்பதை கிளிக் செய்யவும்.

அதன்பின் backup உள்ளடக்கங்களை பார்வையிட கோப்புகளை தேடவும் அல்லது கோப்புறைகளை தேடவும் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்.