பாகம் ஒன்றில் நான் சொல்லியிருந்ததை போல் “இப்பவே சேருக” பட்டனை கிளிக் செய்தபின் தோன்றும் படிவத்தை பின்வருமாறு பூர்த்தி செய்யவும்:

1. பயனர் பெயர்(user name) என்ற இடத்தில் உங்களுடைய பெயரை கொடுக்கவும் இதுவே உங்களுடைய பிளாக்கின் பெயராகவும் இருக்கும்.

Tamil Blog

2. கடவுச்சொல் என்பது உங்களுடைய password தான் வேறொன்றும் இல்லை ( என்ன செய்வது).

3. மறுபடியும் கடவுசொல்லை கொடுக்கவும் – இது கடவுச்சொல்லை சரிபார்பதற்காக.

4. உங்களுடைய மின்மடல் அதாவது Email ஐடியை டைப் செய்யவும்.

5. பின்பு சட்டச்சிக்கல் (இதனால் ஒன்றும் பெரிய சிக்கல் வரப்போவதில்லை – ஆங்கிலத்தில் Terms and Conditions என்கிறோமே அதுதான்) ஆப்சனை தேர்வு செய்யவும்.

6. நான் முதலிலேயே சொல்லியதைபோல் “ஒரு பதிவு கொடுங்க” என்பதை தேர்வு செய்யவும்.

கடைசியாக அடுத்து என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

7. இப்போது தோன்றும் படிவத்தில் நீங்கள் உங்கள் பயனர் பெயர் இல்லாத பிளாக் பெயரை  தேர்வு  செய்யலாம், பின்பு கணக்கை துவக்கவும் என்ற  பட்டனை கிளிக் செய்யவும்.

“மன்னிக்கவும், அந்தப் பயனர் பெயர் ஏற்கனவே பாவனையில் உள்ளது” என்ற மெசேஜ் வந்தால் தயவுசெய்து வேறொரு பயனர் பெயரை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களுடைய  இ மெயிலை செக் செய்யவும், பின்பு wordpress உதவியுடன்  நீங்கள் உங்கள் பிளாக்கின் பயணத்தை துவங்கலாம்.

அடுத்த பக்கத்தில் பிளாக்கர்(Blogger) உதவியுடன் தமிழில் பிளாக் தொடங்குவதை பற்றி விவாதிக்கவுள்ளேன்.