தமிழ்பிளாக்.இன்

கோப்புகளை காப்பு(back up) மற்றும் தரவுகளை மீட்பது(recover data) எப்படி?

கணினிக்கு புதியவர்களுக்கு கூட கோப்பு காப்பு பற்றிய முக்கியத்துவம் தெரியும், ஆனால் நம்மில் பலருக்கு சரியாக எப்படி கோப்புகளை காப்பது மற்றும் தரவுகளை மீட்பது பற்றிய விவரம் தெரியாத காரணத்தினால் அது கடினமான காரியமாக ஒதுக்கப்பட்டிருக்கும்.  அது தவறான கருத்து என்பதை குறிக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்ட சுழபமான வழிமுறைகள் இதோ.

விண்டோஸ் காப்பு மற்றும் தரவு மீட்பு

காப்பு மற்றும் தரவு மீட்பை ஒத்துழைக்கும் நோக்கத்துடன் தரப்பட்டுள்ள  வசதி தான் விண்டோஸ் Backup and Restore feature.இந்த வசதியை விண்டோஸ் 7 இல் பயன்படுத்த,தேடல் பெட்டியில், Backupஎன்று டைப் செய்து.பின் முடிவு பட்டியலில் உள்ளதை கிளிக் செய்து திறக்கவும்.இந்த வசதியை Windows Vista வில் உபயோகப்படுத்த,Start பட்டனை கிளிக் செய்து, Backup and Restore center என்பதை தேர்ந்தெடுக்கவும் அல்லது மேலே குறிப்பிட்டுள்ளதை போல் தேடல் பெட்டியில் Backupஎன்று டைப் செய்து. பின் முடிவு பட்டியலில் உள்ளதை கிளிக் செய்து திறக்கவும் .

கோப்புகளை back up எடுக்க:
நீங்கள் உங்கள் கோப்புகள் இழக்காமல் இருப்பதற்கு, இரண்டு வழிமுறைகளில்(தானாக காப்பு வரை அமைக்க அல்லது கைமுறையாக) ஏதேனும் ஒன்றின் மூலம் வழக்கமாக அவற்றை back up எடுத்துக் கொள்ளலாம்.

Backup and Restore யை திறக்க Start பட்டனை கிளிக் செய்து, Control Panel க்கு சென்று கணினி மற்றும் பராமரிப்பு கிளிக் செய்து, பின்னர் காப்பு மற்றும் மீட்டமை என்பதை கிளிக் செய்யவும்.

நீங்கள் முன்பு விண்டோஸ் Backup and Restore உபயோகபடுத்தவில்லை என்றால், காப்பு அமைக்கவும் என்பதை கிளிக் செய்யவும், பின்னர் வழிகாட்டியூல் உள்ள வழிமுறைகளை பின்பற்றவும். நீங்கள முன்பு காப்பு உருவாக்கி விட்டீர்கள் என்றால், உங்கள் முறையாக திட்டமிடப்பட்ட காப்பு ஏற்படும் வரை நீங்கள் காத்திருக்கலாம் , அல்லது நீங்களே கைமுறையாக செய்யவேண்டும் என்றால் Backup now என்பதை  கிளிக் செய்வதன் மூலம் ஒரு புதிய காப்பு உருவாக்க முடியும்.

Backup எடுக்கும் போது விண்டோஸ் நிறுவப்பட்ட அதே ஹார்ட்டிஸ்க் ல் உங்கள் கோப்புகளை back up எடுக்க வேண்டாம்.அதற்கு பதிலாக External ஹார்ட்டிஸ்க், டிவிடிக்கள், அல்லது CD பயன்படுத்திக்கொள்ளலாம்.

Backup லிருந்து கோப்புகளை restore  செய்ய:

நீங்கள் இழந்த, சேதமடைந்த, அல்லது தற்செயலாக மாற்றப்பட்ட அந்த கோப்புகளை மீட்டெடுக்க வேண்டும் என்றால் Start பட்டனை கிளிக் செய்து, Control Panel க்கு சென்று கணினி மற்றும் பராமரிப்பு கிளிக் செய்து, பின்னர் காப்பு மற்றும் மீட்டமை என்பதை கிளிக் செய்யவும்.

உங்கள் கோப்புகளை மட்டும் மீட்க, என் கோப்புகளை மீட்டமை என்பதை கிளிக் செய்யவும்.அனைத்து பயனர் கோப்புகளை மீட்க, அனைத்து பயனர் ‘கோப்புகளை மீட்டமை என்பதை கிளிக் செய்யவும்.

அதன்பின் backup உள்ளடக்கங்களை பார்வையிட கோப்புகளை தேடவும் அல்லது கோப்புறைகளை தேடவும் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

WiFi என்றால் என்ன?

“WiFi” என்பது கேபிள்கள்,கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் உபயோகப்படுத்தக்கூடிய அதிவேக இண்டர்நெட் மற்றும் நெட்வொர்க் இணைப்பு(wireless நெட்வொர்க்). இந்த இணைப்பு wired நெட்வொர்க் காட்டிலும் எளிதாக மற்றும் மலிவானதாக உள்ளது. phone socket தேவைப்படாத காரணத்தினால் கம்ப்யூட்டர் ஐ எங்கு வேண்டுமென்றாலும் நகர்த்திக் கொள்ளலாம்.அதுமட்டும் இல்லாமல் விரைவாகவும் எளிதாகவும், ஒரு இணைய இணைப்பைக் கொண்டு பல கணினிகளை இணைக்க அனுமதிக்கிறது.

WiFi Hotspots என்றால் என்ன?

WiFi ஹாட்ஸ்பாட் என்பது WiFi ரேடியோ சிக்னல்கள் கிடைக்கக்கூடிய குறிபிட்ட பகுதி.ஒரு வயர்லெஸ் ரவுட்டர் கொண்டு WiFi இனைப்பை உங்கள் கணினியில் செயல்படுத்திவிட்டால், சுமார் 20 மீட்டர் (65 அடி) (உள்புறம் மற்றும் அதிக அளவு வெளிப்புறங்களில்) WiFi  ஹாட்ஸ்பாட்டாக(access point) இருக்கும்.

வயர்லெஸ் நெட்வொர்க் அமைக்க என்ன தேவை?

1. வயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆதரிக்கும் ஒரு இயக்க அமைப்பு(Operating system)

2. Broad band (DSL அல்லது கேபிள்) இணைய இணைப்பு.

3. ஒரு கம்பியில்லா திசைவி(wireless router), ஒரு டிஎஸ்எல் மோடம், அல்லது உள்ளமைக்கப்பட்ட(inbuilt) வயர்லெஸ் நெட்வொர்க்கிங் support கேபிள் மோடம்.

4. வயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆதரவு அல்லது ஒரு வயர்லெஸ் நெட்வொர்க் adapter உள்ளமைக்கப்பட்ட கணினி.

5. உங்கள் திசைவி அமைப்பு அறிவுறுத்தல்கள்(router setup instructions) ஒரு நகல்.

வயர்லெஸ் நெட்வொர்க் அமைப்பது எப்படி?

1. இணையத்துடன் இணைக்கவும்
2. கம்பியில்லா திசைவி (wireless router)இணைக்கவும்.
3. கம்பியில்லா திசைவி(wireless router) யை configure செய்யவும்.
4. வயர்லெஸ் நெட்வொர்க்கில் கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், மற்றும் பிற சாதனங்களை இணைக்கவும்.
5. இறுதியாக கோப்புகள், அச்சுப்பொறிகள், போன்றவற்றை பகிர்ந்துகொள்ளலாம்.

Remote Location இல் இருந்து உங்கள் கணினியை இணைப்பது எப்படி?

Remote Desktop இணைப்பு வசதியின் மூலம் உங்கள் கணினியில் (host) உட்கார்ந்து கொண்டு அதே நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும் மற்றொரு கணினியை (client) இணைத்துக்கொள்ளலாம். இதனால் அந்த கணினியை உங்களது முழுக் கட்டுபாட்டில் கொண்டு வரலாம்.

இந்த வசதியை செயல்படுத்த, உங்கள் ஹோஸ்ட் கணினியில் administrator ஆக உள்நுழைந்து சில கட்டமைப்புகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும்.

Click on “My Computer“–>Properties.
remotedesktop1

Remote tab கீழ் உள்ள “Allow users to connect remotely to this computer” யை தேர்ந்தெடுத்து.Ok பட்டன்னை கிளிக் செய்யவும்.

ஹோஸ்ட் கம்ப்யூட்டரின் IP address யை தெரிந்துகொள்ள,command promptக்கு போய் “ipconfig/all“ என்று டைப் செய்யவும்.

இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் client computerக்கு சென்று , Windows+R பிரஸ் செய்து mstsc“ என்று டைப் செய்யவும்.

“கணினி” பிரிவில், உங்கள் ஹோஸ்ட் IP முகவரியை அளிக்கவும். பின்பு “பயனர் பெயர்”வழங்கவும். அதன்பின் கடவுச்சொல்லை நிரப்பி உள்நுழையவும்.நம்பிக்கைச்சான்று சரியாக இருந்தால்,  உங்கள் ஹோஸ்ட் கணினியை வெற்றிகரமாக இணைக்க முடியும்.

 

புதிய Google Navigation மெனுவை அமைப்பது எப்படி?

கூகிள் சமீபத்தில் புதிய முகப்பு ஒன்றை அறிவித்துள்ளது.அதாவது Google Logo மீது சுட்டயை நகர்த்தினால்,அதனுடன் தொடர்புடைய Google Navigation மெனு காண்பிக்கும். Google Logo மீதுள்ள சுட்டயை வேறு பக்கம் நகர்த்தினால்,அதனுடன் தொடர்புடைய Google Navigation மெனு மறைக்கப்படும்.இதை முயற்சிக்க விரும்பினால், கீழே குறிப்பிட்டுள்ளதை பின்பற்றவும்.

Google new interface

 

நீங்கள் Chrome, Firefox, Safari or Internet Explorer 8+, இதில் ஏதேனும் ஒன்று பயன்படுத்துபவர் என்றால்,புதிய தாவலில் google.com ஐ திறக்கவும்.உதாரணமாக நீங்கள் பயன்படுத்தும் ப்ரௌசெர் Firefox என்றால் (Ctrl+Shift+K) யை அழுத்தி,கீழே உள்ள குறியீட்டை ஒட்டவும்.

document.cookie="PREF=ID=03fd476a699d6487:U=88e8716486ff1e5d:FF=0

:LD=en:CR=2:TM=1322688084:LM=1322688085:S=McEsyvcXKMiVfGds;

path=/; domain=.google.com";window.location.reload();

(Chrome’s JavaScript console (Ctrl+Shift+J), Safari’s Web Inspector (how to do that?), IE’s Developer Tools (press F12 and select the “console” tab))

ஒட்டிய பின்பு Enter  பட்டனை தட்டவும்.(Console ஐ மூட”X” பட்டனை கிளிக் செய்யவும்).மேலும் இதை பற்றிய விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Bill payment,Shopping அனைத்தும் online ல் பாதுகாப்பாக கிரெடிட்/டெபிட் கார்டு நம்பர் இல்லாமல் செய்வது எப்படி?

பாதுகாப்பான முறையில் ஆன்லைனில் Shopping ,Bill payment  செய்ய,Citi bank,HDFC,SBI  போன்ற பல அட்டை வழங்குநர்கள்.இதற்கேன்றே Virtual card number சேவை வழங்குகின்றன.அதாவது உண்மையான வங்கி கடன் அட்டை எண் வெளிப்படுத்தாமல், ஒரு மெய்நிகர் கடன் அட்டை(Virtual card ) மூலம் ஆன்லைனில் ஷாப்பிங்,Payment செய்ய முடியும்.

Virtual Card

இதன் மூல பாதுகாப்பாக,எளிதாக ஷாப்பிங் முடித்து விடலாம்.மற்றும் Repeat பில்லிங் தொல்லை இதில் இல்லை.அட்டை வரம்பு அளவு தேர்வு செய்யும் வழிமுறையும் இதில் உள்ளது.இந்த சேவையை பெற உங்கள் அட்டை வழங்குநர்கள் வலைத்தளத்துக்கு சென்று உள்நுழைந்து, மெய்நிகர் அட்டையை உருவாக்கி பயன்படுதிக்கொள்ளலாம்.   

உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்ட மெயில் இணைப்பு (attached file) கோப்பு காணவில்லையா?

மின்னஞ்சளில் இருந்து ஒரு இணைப்பை திறந்து.அதை உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கிறீர்கள்.ஆனால் காணாமல் போனது போல் தோன்ருகிறதா?. இதேபோல், இணைய பதிவிறக்க கோப்புகளை  பதிவிறக்கம் செய்கிறீர்கள்.ஆனால் சேமிக்கப்பட்ட இடம் எங்கே என்று கண்டுபிடிக்க கடினமாக இருக்ககிறதா?.இதோ கீழே கொடுக்கப்பட்ட  வழிகாட்டளை பின்பற்றி கோப்புகளை மீட்டெடுங்கள்.

வலை பதிவிறக்க முன்னிருப்பு இடங்கள்(Default Location)

உலாவி கோப்புகளை பதிவிறக்கும் போது, அவை பொதுவாக உங்கள் கணினியில் “பதிவிறக்கம்” கோப்புறை (அல்லது, உங்கள் அமைப்பு பொறுத்து சில சமயங்களில், உங்கள் டெஸ்க்டாப், ல்) இல் சேமிக்கப்படும்.

1. Windows XP இல்  \Documents and Settings\[username]\My Documents\Downloads

2. Vista and Windows 7 இல் \Users\[username]\Downloads

3. Mac இல் /Users/[username]/Downloads

4. Linux இல் home\[username]\Downloads

முன்னிருப்பாக இருக்கும் இடத்தை மாற்றுவது எப்படி?

குரோம்:

1. உலாவி Toolbar இல் குறடு Icon சென்று “விருப்பங்கள்” (or “Preferences” on Mac”) என்பதை தேர்ந்தெடுக்கவும்.

2. அடுத்து “Download” பிரிவுக்கு சென்று “Change” பட்டனை கிளிக் செய்யவும்.

3. உங்கள் கோப்புகள் ஒவ்வொரு முறை பதிவிறக்கம் செய்யப்படும் போதும்,எங்கு சேமிகப்படவேண்டும் என்பதை இங்கு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அல்லது “பதிவிறக்கம் செய்யப்படும் முன் ஒவ்வொரு கோப்பையும்  எங்கு சேமிக்க வேண்டும் என கேட்கவும்.” என்று உள்ள Check box ஐ தேர்வு செய்வதன் மூலமும் செய்யலாம்.

பயர்பாக்ஸ்:

1. Tools க்கு சென்று “விருப்பங்கள்” (அல்லது மேக், பயர்பாக்ஸ், ” Preferences”)கிளிக் செய்யவும் .

2. உங்கள் கோப்புகள் ஒவ்வொரு முறை பதிவிறக்கம் செய்யப்படும் போதும்,எங்கு சேமிகப்படவேண்டும் என்பதை இங்கு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அல்லது குரோம் போல, “நீங்கள் கோப்புகளை எங்கு சேமிக்க வேண்டும் என எப்போதும் கேட்க” என்பதை தேர்ந்தெடுக்க முடியும்.

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்:

1. IE9 இல், கருவிப்பட்டியில் கியர் ஐகானை கிளிக் செய்யவும்,பின்பு “பதிவிறக்கங்கள் காண்க” கிளிக் செய்யவும்.

2. பதிவிறக்கங்கள் சாளரத்தின் கீழே “விருப்பங்கள்” பொத்தான் உள்ளது. அதை சொடுக்கி  முன்னிருப்பு பதிவிறக்க இடம் மாற்ற முடியும்.

சஃபாரி:

1. சஃபாரிக்கு சென்று “விருப்பங்கள் …” கிளிக் செய்யவும்.

2. பொது தாவலின் கீழ், “Save downloaded files to:”க்கு அருகில் உள்ள Drop download menu வை கிளிக் செய்வதன் மூலம் வேறு கோப்புறையை தேர்வு செய்யலாம்.

ஜிமெயில் – பகுதி II

இந்த போஸ்ட் இல் Gmail  பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்பாக்ஸ்

Gmail Left side bar

மெயில்ளுக்கு வந்த செய்திகள் அனைத்தும் உங்கள் இன்பாக்ஸ் ல் வரிசையாக இருக்கும்.ஒவ்வொரு செய்தியின் இடது பக்கம் ஒரு சில முக்கிய கூறுகள் இருக்கும்.

அதில் முதலாவதாக அடுக்கு புள்ளி இருக்கும்.அதை பயன்படுத்தி அந்த குறிப்பிட்ட செய்தியை மட்டும் (Drag and drop) இழுது கொண்டு போய் இடது பக்கம் உள்ள Folder ல் வைக்கலாம்.

அடுத்து உள்ளது செக் பாக்ஸ்.இதை பயன்படுத்தி பல செய்திகளை செலக்ட் செய்து மொத்தமாக அந்த செய்திகளை மேலே உள்ள டூல் பார்ரின் மூலம் வரிசைப்படுத்தலாம்.

அடுத்து உள்ளது நட்சத்திர குறியீடு.குறிப்பிட்ட செய்திக்கு அருகில் உள்ள நட்சத்திர குறியீட்டை கிளிக் செய்வதன் மூலம் அந்த செய்தி உங்கள் இன்பாக்ஸ் ல் தனித்து தெரியும்.

இடது Side bar பயன்படுத்தி மின்னஞ்சல்களை கண்டறிதல்


இடது பக்கம் இருப்பது தான் “Left Side bar”.இங்கு தான் ஜிமெயில் அக்கௌன்ட்னுடைய பல பிரிவுகளை பார்க்கமுடியும்.
1. Inbox-மூலம் புதிய மின்னஞ்சல்களை காணலாம்(உங்களுக்கு தெரிந்தது தான்).
2. Starred-வலது உள்ள ஒவ்வொரு செய்தி அருகிளும் சம்பல் நிற நட்சத்திரம் உள்ளது.அதை கிளிக் செய்தால்,அந்த குறிப்பிட்ட செய்தி “Starred” Folder ல் காண்பிக்கப்படும். சிறப்பு உரையாடல்கள் அல்லது செய்திகளுக்கு நட்சத்திரங்கள் அமைக்கலாம், அல்லது நீங்கள் பின்னர் ஒரு செய்தியை அல்லது உரையாடலை பின்பற்ற வேண்டும் என்றால் நினைவூட்டளுக்காக அவற்றை பயன்படுத்தலாம்.நீங்கள் மேலும் செய்திகளுக்கு தகுந்தவாறு பல்வேறு வகையான நட்சத்திரங்களை தேர்ந்தெடுக்க முடியும். உதாரணமாக, நீங்கள் ஒரு பதில் தேவை என்றால் அதற்கு பச்சை நட்சத்திரம், அல்லது நீங்கள் தொடர வேண்டும் என்னும் செய்திக்கு ஆச்சரியக்குறியை உபயோகிக்கலாம்.

பல்வேறு நட்சத்திர விருப்பங்களை அணுக, கீழே குறிபிட்டுள்ளதை செய்யவும்.
i. ஜிமெயில் மேல் வலது மூலையில் உள்ள கியர் Icon சொடுக்கிய பின் அஞ்சல் அமைப்புகள் சொடுக்கவும்.
ii.பொது தாவலில், நட்சத்திரங்கள் பிரிவுக்கு சென்று தேர்ந்தெடுத்து மாற்றங்களை சேமிக்கவும்.
3. Important – வலது உள்ள ஒவ்வொரு செய்தி அருகிளும் சம்பல் நிற நட்சத்திரம் உள்ளது.அதற்கு பக்கத்தில் இருக்கும் பெட்டி போன்ற குறி தான் “Important” செய்திக்கான குறி.அதை கிளிக் செய்தால்,அந்த குறிப்பிட்ட செய்தி “Important” Folder ல் காண்பிக்கப்படும்.ஜிமெயில் செய்திகளை பல்வேறு வகையாக குறிக்க வெவ்வேறு நிற அம்புகள் பயன்படுத்தலாம். ஒரு மஞ்சள் அம்பு செய்தி முக்கியமான மற்றும் படிக்காத என்பதை குறிக்கிறது. ஒரு சாம்பல் மார்க்கர் செய்தி முக்கியமல்லாத ஆவணம் என்பதை குறிக்கிறது. நீங்கள் ஒரு செய்தியை முக்கியம் என்று வகைப்படுத்தியது ஏன் என்று தெரிய விரும்பினால், செய்தி முக்கியத்துவம் மார்க்கர் குறி மேல் உங்கள் சுட்டியை நகர்த்தினால் அதற்குரிய செய்தியை காண்பிக்கும்.
“Important” குறிப்பான் ஐ மறைப்பது எப்படி?
நீங்கள் விரும்பினால், பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி குறிப்பான் ஐ மறைக்க முடியும்:

i. உங்கள் ஜிமெயில் பக்கத்தின் மேல் பகுதியில் உள்ள கியர் Icon சொடுக்கி அஞ்சல் அமைப்புகளை தேர்ந்தெடுக்கவும்.
ii. இன்பாக்ஸ் தாவளுக்கு சென்று “முக்கியத்துவம் குறிப்பான்கள்” பிரிவில், குறிப்பான்கள் விருப்பம் இல்லை தேர்ந்தெடுக்கவும்.

4. Sent Mail- நீங்கள் அனுப்பிய அனைத்து மெயில்களும் இந்த “Sent Mail” தொகுப்பில் இருக்கும்.

5. Draft –  நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை எழுதிக்கொண்டிருக்கும் போது செய்திகள் இழப்பது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.ஜிமெயில்ளில் ஒரு சில நிமிடங்களுக்கு ஒருமுறை  தானாகவே சேமித்துக்கொள்ளும்.

6. அடுத்து உள்ளது  ”Personal” and “Travel.”இந்த பிரிவுகளை தான் “Labels” என்று ஜிமெயில்ளில் அழைக்கிறோம்.நீங்கள் “Labels” கொடுக்கப்பட்ட செய்திகள் இங்கே காணலாம்.”Folder”ல் என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தும் இதன் மூலம் செய்யலாம்.அதுமட்டுமில்லாமல் போனஸ் ஆக ஒரு உரையாடலுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட “Label”கள் சேர்க்க முடியும். நீங்கள் “Label” ஐ உருவாக்கி விட்டு, அந்த “Label”க்கு உண்டானா  அனைத்து செய்திகளையும் பார்க்க “Search” மூலம் அல்லது  ஜிமெயில் பக்கத்தின் இடது புறத்தில் உள்ள பெயரை கிளிக் செய்வதன் மூலம் செய்யலாம்.லேபிளை உருவாக்க:

இடது பக்கம் உள்ள drop-down மெனுவில் “Create New Label” கிளிக் செய்யவும் அல்லது கியர் ஐகான்னை கிளிக் செய்து,Mail settings உள்நுளைந்து Labels தாவலுக்கு சென்று.” Create new” தேர்ந்தெடுத்து.லேபிலின் பெயரை டைப் செய்து,ஓகே கிளிக் செய்யவும்.

உங்கள் செய்திகளை வகைபடுத்த விரும்பினால், வகைபடுத்த விரும்பும் செய்திகளை தேர்ந்தெடுத்து மேலே உள்ள “Move to” கிளிக் செய்து.தேவையான லேபிளுக்கு நகர்த்திக் கொள்ளலாம்.

7. Spam – உங்களுக்கு வந்த “Spam” ஈமெயில்கள் இந்த போல்டரில் இருக்கும்.

8. All Mail – நீங்கள் ஆவணக்காப்பகத்தில் சேமித்து வைத்த செய்திகளை இங்கே பார்க்கலாம்.

9. Trash – ஒரு செய்தியை Delete செய்துவிட்டால் நிரந்தரமாக செய்தி நீக்கப்படும்.ஆனால் உடனடியாக அல்ல.அதற்கு தோராயமாக 30 நாள் எடுக்கும்.அதனால் தற்செயலாக செய்தியை நீக்கிவிட்டால்,உடனடியாக “Trash”க்கு சென்று “Move to inbox” கொடுப்பதன் மூலம் பெற முடியும்.

10. Chat- நீங்கள் சாட் மூலம் உரையாடிய அனைத்து உரையாடல்களும் இங்கே சேமிக்கப்படும்.

 அவ்வளவு தான் ஜிமெயில் பற்றி பார்த்தாச்சு…இதில் எதாவது விட்டு போயிருந்தால் சொல்லவும்.Discuss பண்ணலாம்

Gmail – பகுதி I

ஜிமெயில் என்றால் என்ன?
ஜிமெயில் என்பது Googleலால் வழங்கப்படும் இலவச அஞ்சல்(Email) சேவை.அதை பயன்படுத்தி செய்திகளை அனுப்ப மற்றும் பெறலாம்,செய்திகளுடன் இணைப்பாக வீடியோ,போட்டோ,ஆவணம் போன்றவற்றையும் அனுப்பலாம்.ஆவணக்காப்பகத்தை பயன்படுத்தி இன்பாக்ஸிலிருக்கும் செய்திகளை சேமிப்புக்கு நகர்த்திக் கொள்ளலாம்.

1. ஜிமெயில்ளில் செய்தியை அனுப்புவது எப்படி?

ஒரு செய்தியை அனுப்ப, மேல் இடது பக்கம் இருக்கும் “அஞ்சல் எழுது”(Compose) என்பதை கிளிக் செய்யவும்.புதிய செய்தி அனுப்பும் பக்கம் திறக்கும். அதில் “To” என்று இருக்கும் இடத்தில் ரிசீவர் முகவரியை டைப் செய்யவும்.

மேலும் ஒருவருக்கு செய்தியை அனுப்ப “Add Cc” யை கிளிக் செய்து, முகவரியை டைப் செய்யவும்.

நீங்கள் அனுப்பும் செய்தி மேலும் ஒருவருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.ஆனால், அது மற்றவருக்கு அதாவது “To” மற்றும் ”Add cc” உள்ள நபருக்கு தெரிய கூடாது எனில்.”Bcc” மீது சொடுக்கி, பகிர்ந்து கொள்ள விரும்பும் நபரின்னுடைய முகவரியை டைப் செய்யவும்.

“Subject” என்று இருக்கும் இடத்தில் தலைப்பை உள்ளிடவும்.அடுத்து பெரிய பெட்டியில் செய்திகளை டைப் செய்து, மேலே உள்ள குறியீடுகளை பயன்படுத்தி செய்தியின் உரை வடிவமைப்பை, எழுத்துரு(font) மற்றும் வண்ணத்தை மாற்றிக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி எழுத்துப்பிழை சரி பார்த்துக்கொள்ள,இணைப்புகள் சேர்க்க மற்றும் கோப்புகளை இணைக்கவும் முடியும்.

நீங்கள் எழுதும் கொண்டிருக்கும் போது ஜிமெயில் தானாகவே ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒருமுறை செய்தியை சேமிக்கிறது. உங்கள் செய்தியை டைப் செய்து முடித்தவுடன், “அனுப்பவும்” என்றிருக்கும் பட்டனை கிளிக் செய்தால்,சாளரத்தின் மேலே உங்கள் செய்தி அனுப்பப்பட்டது என்று உறுதிப்படுத்தல் காண்பிக்கப்படும்.

2. ஜிமெயில்ளில் செய்தியை பெறுவது மற்றும் பதில் அனுப்புவது எப்படி?

இன்பாக்ஸ்ல் புதிய செய்தி வந்துள்ளது என்பதை இன்பாக்ஸ் பக்கத்தில் காண்பிக்கும் எண் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஜிமெயில் ஒவ்வொரு செய்தி மற்றும் அனைத்து பதில்களையும் சேமிக்கிறது. புதிதாக பெறப்படும் செய்திகளே முதலாக இருக்கும்.அனைத்து செய்திகளையும் வாசிக்க, “அனைத்தும் விரிவாக்கு”(Expand all”) என்பதை கிளிக் பண்ணவும்.செய்தியை அச்சிட வேண்டும் என்றால், “Reply” க்கு அடுத்து உள்ள கீழ் நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்து “பிரிண்ட்” ஐ கிளிக் செய்யவும்.

நீங்கள் பெறப்பட்ட செய்தியை,வேறு ஒருவருக்கு அனுப்ப வேண்டும் என்றால், பெறப்பட்ட செய்தியை திறந்து.செய்தி பகுதிக்கு கீழே உள்ள “முன்னோக்கு” என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்து பெறுபவர்கள் ‘முகவரிகளை உள்ளிட்டு, நீங்கள் சேர்க்க விரும்பும் செய்தி குறிப்புகளை சேர்த்து.”அனுப்பவும்” பட்டனை சொடுக்கவும்.

3. ஜிமெயில்ளில் இணைப்பு அனுப்புவது எப்படி?

Gmail இல், ஆவணங்கள், புகைப்படங்கள் அல்லது வீடியோ போன்ற இணைப்புகளை சேர்க்க,”subject” கீழ் கொடுக்கபட்டுள்ள “Attach a file” என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும். நீங்கள் இணைக்க விரும்பும் கோப்புகளை உங்கள் கணினியில் இருந்து எடுத்துக்கொள்ளவும்.

“மற்றொரு கோப்பை இணை”லிங்கின் மூலம் மேலும் பல ஆவணங்களை இணைக்கலாம். இணைக்கப்பட்டுள்ள கோப்பு நீக்கவேண்டும் என்றால், “அகற்று”(Remove”) என்றுள்ள லிங்க்கை கிளிக் பண்ணவும்.

இணைப்பை பார்க்க வேண்டும் என்றால், செய்தியை திறந்து,செய்திக்கு கீழே உள்ள “view” லிங்க்கை கிளிக் செய்து பார்க்க மற்றும் சேமிக்க செய்யலாம்.

4. செய்தி தொகுப்பு

ஆவணக்காப்பகத்தை பயன்படுத்தி இன்பாக்ஸிலிருக்கும் செய்திகளை சேமிப்புக்கு நகர்த்திக் கொள்ளலாம்.அதில் உள்ள மின்னஞ்சல் தகவல்களை அறிய Google தேடல் உபயோகித்து பெற்றுக்கொள்ளலாம்.

ஜிமெயில் அடிப்படைக்கு அப்பால் இன்னும் பல அம்சங்களை கொண்டிருக்கிறது. அதை அடுத்து வரும் பகுதியில் பார்க்கலாம்.

உங்கள் iphone,ipod touch அல்லது ipad மூலம் வீடியோ மெயில் அனுப்புவது எப்படி

உங்கள் iphone,ipod touch அல்லது ipad மூலம் வீடியோ மெயில் அனுப்ப வேண்டுமா?அதற்கு,முதலில் மின்னஞ்சல் கணக்கு உருவாக்க வேண்டும். அதன் பின் கீழே குறிப்பிட்டுள்ளதை பின்பற்றவும்:

1. உங்கள் ஐபோன், ஐபாட் டச், அல்லது ஐபாட் ல் கேமரா application ஐ திறக்கவும்.

2. முன்-எதிர்கொள்ளும் கேமரா (Front facing camera)வை activate பண்ண, திரையின் மேல் கேமரா ஸ்விட்ச் பொத்தானை தட்டவும்.(இப்போது திரையை உங்கள் பக்கம் திருப்பி பரிசோதித்து கொள்ளுங்கள்.உங்கள் முகம் திரையுள் தெரிகிறதா என்று).

 

3. கேமரா திரையில் கீழ் வலது பக்கம் ஒரு சுவிட்ச் இருக்கும். அது வழக்கமான கேமரா மற்றும் வீடியோ கேமரா இடையே செல்ல பயன்படுத்தும் toggle சுவிட்ச்.அந்த சுவிட்ச் வலது பக்கம் இருந்தால்,அது வீடியோ கேமராவில் உள்ளது என்று அர்த்தம.அப்படி இல்லை என்றால்?அதை மாற்ற உங்கள் விரலால் வலது நோக்கி தேய்க்கவும்.

4. நீங்கள் தயாராக இருக்கும் போது பதிவு தொடங்க, கீழே (நடுவில்) உள்ள சிவப்பு பொத்தானை அழுத்தவும். நீங்கள் உங்கள் செய்தியை பதிவு செய்து முடித்ததும்,மீண்டும் அதே பொத்தானை அழுத்தவும். வீடியோ பதிவு 45 விநாடிகளுக்குள் வருமாறு பார்த்துக்கொள்ளவும்.

5. கேமரா திரையின் கீழே உள்ள சிறு thumbnail ஐகான் ஐ பிரஸ் செய்தால், கேமரா ரோல் திரைக்குள் செல்லும்.திரையின் கீழே இடது மூலையில், Share button அதாவது அம்புடன் சதுரம் போல் உள்ள பொத்தானை தட்டவும்.பின் மேலே உள்ள ஈமெயில் option ஐ தட்டவும்.இப்போது ஐபோன் உங்கள் வீடியோவை தயார் செய்ய ஆரம்பித்து விடும்.

6. வீடியோ தான் தயாரிப்பு முடிந்ததும், ஒரு புதிய மின்னஞ்சல் மற்றும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது என்று குறிக்கும் அதன் சின்னத்தையும் காட்டும்.

7. எப்பொழுதும் போல மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் அதன் தொடர்புடைய அனைத்தையும் நிரப்பி send என்னும் பட்டனை அழுத்தவும். அவ்வளவுதான் உங்கள் வீடியோ மெயில் அனுப்பியாச்சு…உங்கள் வீடியோ மெயில் சென்றடைய சிறு நேரம் எடுக்கும்.

கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பற்றி சுலபமாக கற்றுகொள்வது எப்படி?

கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பற்றி உங்க பெற்றோருக்கு கற்றுக்கொடுக்க நினைக்கறீர்களா?டைம் இல்லையா!!! கவலை பட வேண்டாம்.ரொம்ப ஈஸி.இதோ போங்க இந்த தளத்திற்கு.உங்க உதவி இல்லாமல் அவங்கலாகவே கற்றுகொள்ள முடியும்.கீழே கொடுக்கபட்டது போல் ஒரு சில option தட்டுதல் மூலம் கணினிஅடிப்படை,உலகளாவிய வலை,ஊடகங்கள்,தகவல் கண்டுபிடிப்பு மற்றும் அதன் சம்மந்தபட்ட கேள்விகளுக்கு வீடியோ செய்முறை விளக்கம் பார்த்து கற்றுக்கொள்ளலாம்.

Teachparent

 

  • விளம்பரம்